அகில பாரத மக்கள் கட்சியின் அடிப்படையான கொள்கையென்பது இந்தியாவில் மற்றும் குறிப்பாக தமிழகத்தில் வாழ்ந்துவரும் அனைத்து சமூக இந்து மக்களின் பாரம்பரியம், கலாச்சாரம், வழிபாட்டு முறைகள், அவர்கள் சார்ந்த சமூகத்தின் பண்பாடுகள் போன்றவற்றிற்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படாதவாறு மத்திய மற்றும் மாநிலத்தில் அமையும் அரசியல் கட்சிகளின் ஆட்சியின்போது பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்பது அகில பாரத மக்கள் கட்சியின் பெருமதிப்பிற்குரிய நிறுவனத்தலைவர் Dr.S.ராமநாதன் ஜி அவர்களுடைய நிச்சயமான கோட்பாடு.
இந்துத்துவா கொள்கையின் அடிப்படையான அனைத்து அம்சங்களையும் பேணி பாதுகாக்கும் அரசியல் கட்சிகளோடு மட்டுமே எந்தக் காலத்திலும் அகில பாரத மக்கள் கட்சி தேர்தல் கூட்டணி மற்றும் ஆதரவு அளிக்கும். தமிழகத்தில் அல்லது இந்தியாவில் இந்து மக்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய எந்த ஒரு தேவையற்ற வன்முறைகளுக்கு எதிராக அகில பாரத மக்கள் கட்சி எதிர்த்துக் குரல் கொடுக்கும்.
நீங்கள் அரசியலில் ஆர்வம் காட்டாததால், அரசியல் உங்கள் மீது ஆர்வம் காட்டாது என்று அர்த்தமல்ல.